🇱🇰இலங்கை பிரதமர் அதிர்ச்சி! இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதமரின் இணையத்தளம் நேற்று ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது. மஹிந்த ராஜபக்ஸவின் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்கு பிரவேசிக்கும் வகையில் URL Redirect செய்யப்பட்டுள்ளது.

].

இவ்வாறு URL Redirect செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் BITCOIN தொடர்பான தகவல்களே காணப்பட்டதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது.எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீள வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.