🇫🇷 பிரான்சில் கொரொனா.! தற்போதைய நிலவரம்.!!!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன.கடந்த 24 மணிநேர்ச்த்தில் 4,580 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று வீதம் இரண்டாவது நாளாக 1% ஆகவே இருக்க, இதுவரை தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,803,687 ஆக உயர்வடைந்துள்ளது.தொற்றுக்கள் அதிகமாகினாலும், மருத்துவமனை நிலவரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தே வருகின்றது. 953 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், சாதாரண சிகிச்சையில் 7,275 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 111,331 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 84,858 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.