🔴🇫🇷பிரதமர் உரை பிற்போடப்பட்டுள்ளது.?

இன்று வியாழக்கிழமை மாலை குறிக்கப்பட்ட நேரத்தில் பிரதமர் உரையாற்ற மாட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன இன்று மார்ச் 18 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதமர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு இடம்பெறுவதாக இருந்த இந்த உரை ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 7 மணிக்கு இடம்பெறும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது ஊடகத்தினர் முன்பாக இடம்பெறும் இந்த உரையில் பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Véran ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இல் து பிரான்சுக்குள் கொண்டுவரப்படும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக அவர்கள் இன்றைய தினம் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.