🔴 🇫🇷 ” Astra zencea ” தடுப்பூசியை துணிச்சலுடன் போட்டு கொண்ட பிரதமர்…!!!

பிரான்ஸ்ல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான கொரோனா தடுப்பூசியான AstraZeneca இனை சற்று முன்னர் பிரதமர் போட்டுக்கொண்டார் குறித்த AstraZeneca தடுப்பூசி அண்மையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த தடுப்பூசியினை தடை செய்திருந்தது.

இறுதியா பிரான்சும் இந்த பட்டியலில் இணைந்திருந்தது பின்னர் ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் இருந்து இந்த AstraZeneca தடுப்பூசிகள் மீண்டும் பிரான்சில் போட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் தடுப்பூசியை 55 வயதுடைய பிரதமர் Jean Castex போட்டுக்கொண்டார் இந்த AstraZeneca தடுப்பூசி முதன் முதலாக பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டபோது சுகாதார அமைச்சரே முதன் முதலாக போட்டுக்கொண்டமை குறிப்பிடத்தகக்கது.