🇬🇧🇱🇰😳இலங்கையர்களுக்கு விசாவை அள்ளி வழங்கும் பிரித்தானியா!

பிரித்தானியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து உயர் கல்விகளை பயில்வது வழக்கம். இதற்கு வயது எல்லை 50 ஆக கூட இருந்தாலும் பரவாயில்லை. தற்போதைய நிலையில் எவருமே பிரித்தானியா வந்து கல்வி பயில ஆர்வம் காட்டவில்லை. உயிர் தப்பினாலே போதும் என்று தங்கள் தங்கள் நாடுகளில் இருந்து விட்டார்கள். இன் நிலையில் பல்கலைக் கழகங்கள், மற்றும் கல்லூரிகளில் இதனால் பல இடங்கள் வெற்றிடமாகவே உள்ளது. இதனை அடுத்து எவர் அப்பிளை செய்தாலும், கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மாணவர்களுக்கான விசாவை உடனே கொடுத்து வருகிறது. ரிஜெக்ட் ஆகும் விண்ணப்பங்கள் மிக மிக குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.