🇫🇷பிரான்ஸ் காவல்துறை அதிகாரி தற்கொலை!

காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை Puy-Saint-Pierre (Hautes-Alpes) நகரில் வசிக்கும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாரி 44 வயதுடையவர் எனவும், காவல்துறை பிரிகேடியராக பணியாற்றியவர் எனவும் அறிய முடிகிறது.

நேற்று மாலை 7.15 மணிக்கு அவரது சடலம் அப்பகுதி ஜொந்தாமினர்களால் அடையாளம் கண்டுபிடிக்கபட்டது. தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளர். இவ்வருடத்தில் பதிவாகும் முதலாவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இது எனபது குறிப்பிடத்தக்கது.