⚫🇱🇰பேஸ்புக் மூலம் பொலிஸ் அதிகாரியை காதலித்து மணந்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

சீதுவ பகுதியில் பேஸ்புக் மூலம் ஒரு பொலிஸ் அதிகாரியை காதலித்து திருமணம் முடித்த இளம் பெண் ஒருவர் சித்திரவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் ஆர். எல். சந்திர பிரபா ஜனாதரி என்ற 26 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. குறித்த பொலிஸ் அதிகாரி விபரீத ஆசை கொண்டவர் என்றும் போதைப் பொருள் பாவிப்பவர் என்றும், தனது மகளுக்கு அடித்து துன்புறுத்துவார் என்றும் உயிரிழந்த பெண்ணின் தாயார் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்.

மகள் திருமணம் முடித்த பின்னர் 4 தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், நான்காவது தடவை உயிரிழந்ததாகவும் தாயார் குறிப்பிட்டார். இதேவேளை குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது காங்கேசன்துறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் எனறும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்த பொலிஸ் அதிகாரி இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை குறித்த சம்பவத்தில் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது தொடர்பில் சீதுவ பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.