🇫🇷 பிரித்தானியாவின் கொரோனாவை எதிர் கொள்ள தயார் சுகாதார அமைச்சர் இறுமாப்பு…!!!

பிரான்ஸில் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணமே உள்ளனர் தீவிரசிகிச்சைப் பிரிவுகளும் நிரம்பத் தொடங்கி உள்ளன பிரித்தானிய வைரசின் தாக்கம் அதிகரிக்கின்றது இந்திலையில் அரசாங்கம் உள்ளிருப்பு அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் மூன்றாவது தொற்றலை மிகவும் அச்சத்திற்கும் ஆபத்திற்கும் உரியது முக்கியமாகப் பிரித்தானிய வைரசின் தொற்று ஆனாலும் இதை நாம் தவிர்க்க் முடியும் என நம்புகின்றேன்” என ஒரு ஊடகச் செவ்வியில் பிரான்சின் சுகாதாரத்துளை அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனத் தொற்று சற்று பின்வாங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த சில நாட்களில் கொரோனத் தொற்றானது சிறிதளவே உயர்ந்துள்ளது இன்றும் அதே நிலைமை தான மற்றும் இல்-து-பிரான்சின் கழிவு நீரில் இருந்த கொரோனத் தொற்றும் குறைய ஆரம்பித்துள்ளது இது ஊரடங்கின் பயனாக நாம் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.