🇫🇷 🔴 புகையிரதத்துக்குள் நுழைந்த மர்மநபர்..!! தடைப்பட்டது போக்குவரத்து..!!

நெடுந்தூர தொடருந்து சேவையான TGV இல் பயணித்த மர்ம நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் Marseille மாவட்டத்தில் உள்ள Marseille Saint-Charles தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த தொடருந்து நிலையத்தில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றது பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது அதன் முடிவில் சந்தேகத்துக்கிடமான ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவரிடம் catégorie D வகை ஆயுதம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிலமணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது தற்போது மீண்டும் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.