🇫🇷பிரான்ஸில் சத்தமாக பேசுவதால் கொரோனா பரவுகிறதா? புதிய தடை!

பொது போக்குவரத்துக்களில் பயணிக்கும் போது சத்தமாக பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என புதிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மெற்றோக்களில், பேருந்துகளில் சத்தமாக உரையாடுவதால் கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவுவதாகவும், இதனால் சத்தமாக உரையாடுவதையும், தொலைபேசியில் பேசுவதையும் தவிர்க்கும் படியான ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை i l’Académie de médecine இல் இடம்பெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என்பதால் இந்த கருத்து அங்கேயே நிராகரிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் இடையில் 1 தொடக்கம் 2 மீற்றர் இடைவெளி விட்டு பயணித்தாலே போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கும் போது, ‘வீட்டில் தயாரித்த தரமற்ற முகக்கவசங்களை அணிய வேண்டாம் எனவும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட முகக்கவசங்களை மாத்திரம் அணியவும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.