🇫🇷🦜🐓பறவைகளிற்கு அடிபணியும் பாரிஸ் மாநகரசபை!

பரிஸ் மாநகரசபையின் பெரும்பாலான உறுப்பினர்கள், பரிசிலுள்ள பறவைகள் சந்தையை மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளனர். பரிசின் 4 வது பிராந்தியத்தில் உள்ள, Île de la Cité யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பறவைகள் சந்தை அமைக்கப்படுவது வழமை. இது 19ம் நூற்றாண்டில் இருந்து இங்கு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பரிசின் தொண்டு நிறுவனமான Paris Animaux Zoopolis சங்கம் தொடர்ச்சியான அழுத்தங்களை பரிசின் மாநகரசபைக்கு வழங்கியதையடுத்தே இந்த முடிவினைப் பரிஸ் மாநகரசபை எடுத்துள்ளது. பறவைகளையும், வளர்ப்பு மீன்களையும், விற்பனைப் பண்டமாக இன்னமும் வைத்திருப்பது கொடூரமானது என இந்த தொண்டு நிறுவனம் கொடுத்த அழுத்தத்திற்கு பரிஸ் மாநகரசபை அடிபணிந்துள்ளது.