🇫🇷பாரிஸ் நகர முதல்வரின் புதிய திட்டம்! ஐந்து ஆண்டுகளில் சாத்தியம்!

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பாரிய மர நடுகை செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆன் இதால்கோ 170.000 மரங்களை நட திட்டமிட்டுள்ளார். தலைநகர் பரிசிலேயே இந்த மரங்களை நட தீர்மானித்துள்ளார்.

குறிப்பாக சுற்றுவட்ட வீதிகளின் இரு பகுதிகளிலும், பரிசில் சில வட்டாரங்களில் இந்த மரங்கள் நடப்பட உள்ளன. பசுமை குறைவாக காணப்படும் வட்டாரங்கள் (குறிப்பாக 6 ஆம் 7 ஆம் வட்டாரங்களில்..) இந்த மரங்கள் நடப்பட உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளை இலக்கு வைத்து மொத்தமாக 170.000 மரங்கள் நடப்பட உள்ளதாக பரிஸ் நகர துணைமுதல்வர் தெரிவித்துள்ளார்.