🔴 🇫🇷 பரிஸ் விமான நிலையம் வருவோரா நீங்கள் …!!! கட்டாயம் பார்க வேண்டிய விடயம் …!!

பரிஸ் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் வருகை தருவோர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இல்- து பிரான்சின் விமான நிலையங்களூடாக வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பின் போது மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன அதில் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளிருப்பு மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்கு மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.