⚫அகதிகள் என்ற போர்வையில் இஸ்லாமிய ஆயுததாரிகள் தேவையில்லை! புட்டின்..

ஆப்கான் மோதல் ரஷ்யாவின் பாதுகாப்பு நிலைமையை நேரடியாக பாதிப்பதாக ஜனாதிபதி விலட்மிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான வீசா செயன்முறைகள் காணப்பட்டாலும் மேற்குலக நாடுகள் ஆப்கான் அதிகளை மத்திய ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையை விலட்மிர் புட்டின் விமர்சித்துள்ளார்.

இதேவேளை அதிகள் என்ற போர்வையில் இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் தமது நாட்டுக்கு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புட்டின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!