🇫🇷 RER A மற்றும் RER B போக்குவரத்துக்கு தடை …!!!மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்குமா….!

தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதை அடுத்து RER சேவைகள் சில தடைப்பட உள்ளன இந்த வேலை நிறுத்தம் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

CGT, Unsa, SUD மற்றும் FO ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு தங்களது ஊழியர்களை அழைத்துள்ளனர் இந்த வேலை நிறுத்தத்தினால் RER A மற்றும் RER B ஆகிய தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளன.

இச்சேவைகளுக்கு மாற்றாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.