🔴 🔴 சீன நாட்டின் சைனோபார்ம் தடுப்பூசி கொரோனாவை தடைசெய்யும் தடுப்பூசி அல்ல…! புலம்பும் பிரதமர்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இம்ரான் கான் அண்மையில் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டது நினைவு கூரத்தக்கது.

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனால் மிதமான கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது.