⚫😳🔥லண்டன் தமிழர்களால் கொதித்தெழுந்த சரத் வீரசேகர!

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி லண்டனில் இடம்பெற்ற நிகழ்வில் புலிகளின் ஆதரவாளர்கள் புலிக்கொடிகளை ஏந்தி, ஈழ கீதத்தை இசைத்துள்ளனர். இத்தகையோருக்கு எதிராக இங்கிலாந்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்ச சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். புலிகள் இயக்கம் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ளது, பொதுமக்களை நினைவுகூருவது என்ற போர்வையில் இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்பின் சின்னங்களை காட்சிப்படுத்த எப்படி அனுமதிக்கலாம்? எனவும் அவா் கேள்வி எழுப்பியுள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்று தனது ருவிட்டரில் வெளியிட்டு சரத் வீரசேகர இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.