⚫விடுதலைப் புலிகள் குறித்து வெளியான சர்ச்சை கருத்து! வலுக்கும் எதிர்ப்புகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு தமிழர் தரப்பில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.


தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்த காலத்திலும் கூட மனிதாபமான ரீதியில் செயற்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், மனிதாபிமானமற்று செயற்பட்டவர்கள் பொன்சேகா தரப்பினர் எனவும் குற்றம்சாட்டினார். இதேவேளை, புலம்பெயர் தமிழர்களே இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை தொடர்ந்தும் ஊக்குவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெருந்தேசியவாதிகளால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களை இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றமை அயோக்கியதனமான நடவடிக்கை என ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.