🔴 🇫🇷 கொரோனாத் தொற்றின் அகோரம் கல்வி நிலையங்கள் திடீர் முடக்கம்…!!!!

பாடசாலைகளில் கொரோனாத் தொற்றானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ் பாடசாலை விடுமுறைகளை 15 நாட்களிற்கு முன்னதாக அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதற்கு இன்னமும் உறுதியான பதில் கொடுக்கவில்லை பிரான்சின் கல்வி நிலையங்கள் பாலர் பாடசாலைகள், ஆரம்பப்பாடசாலைகள், கொலேஜ்கள், லிசேக்கள் 6,1500 இல் 148 மூடப்பட்டுள்ளன.

இதில் 116 பாடசாலைகள், 22 கொலேஜ்கள், மற்றும் 10 லிசேக்கள் மூடப்பட்டுள்ளதாக பிரான்சின் தேசியக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளார் ஆனால் இந்தத் தரவுகள் சில வாரங்களிற்கு முந்தியவை என்றும் தற்போது இது இரட்டிப்பாக உள்ளதென்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் விபரப்படி பிரான்சில் 12.400.000 மாணவர்களில் 21.183 மாணவர்களிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 2.515 கல்வித்துறையினர்க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை 3256 வகுப்புகள் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.