🔴 🇫🇷 செய்ன் நதிக்குள் சிறுமியின் உடல்…..!! சிறுமியின் நண்பர் இருவர் கைது…!!!

நேற்று 20h30 அளவில் வல்-து-உவாஸ் (Val-d’Oise) இலுள்ள ஆர்ஜொந்தொய் (Argenteuil) நகரிலுள்ள Quai de Saint-Denis நதிப்பகுதியில் rue des Grandes Saules இன் எதிர்ப்பகுதியில் ஒரு 14 வயது இளம் பெண்ணின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் ஒரு 15 வயது இளைஞனும் அவரது நண்பியான 15 வயது இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர் தனது மகன் இரத்தம் தோய்ந்த உடையுடன் வீட்டிற்கு வந்ததையடுத்து இந்த 15 வயதுடைய இளைஞனின் தாய் வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.

இந்த 14 வயதுடைய இளம் பெண் இந்த இருவரால் மோசமாகத் தாக்கப்பட்டு செய்ன் நிதிக்குள் வீசப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்கள் மூவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என்பதும் குறிப்படத்தக்கது.