⚫🇫🇷பிரான்ஸில் சட்டவிரோத பயணம்! மீட்கப்பட்ட அகதிகள்!

சட்டவிரோதமாக பிரித்தானியா நோக்கி பயணித்த 159 அகதிகள் ஒரே நாளில் மீட்க்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு இந்த மீட்ப்புப்பணிகள் பா து கலே நகரில் (Pas-de-Calais) நகரில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 10 இடங்களில் இந்த மீட்புப்பணிகள் இரவு முழுவதும் இடம்பெற்றன. Dunkirk நகர கடற்பிராந்தியத்தில் 26 பேர் (இரு பெண்கள், நான்கு சிறுவர்கள் உட்பட) மீட்க்கப்பட்டிருந்தனர்.

Calais மற்றும் Marck கடற்பிராந்தியங்களிலும் பலர் ஆபத்தான படகில் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், கடற்படையினரால் மீட்க்கப்பட்டனர். இதுபோல் இரவு முழுவதும் மொத்தமாக 10 படகுகளில் பயணித்த பல அகதிகள் மீட்க்கப்பட்டனர். மொத்தமாக 159 பேர் மீட்க்கப்பட்டிருந்தனர்.