🇫🇷பிரான்ஸில்உள்ள மருத்துவமனையில் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.??

இல் து பிரான்ஸ் மருத்துவமனைகள் பாரிய நோயாளிகளின் எண்ணிக்கையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளில் 1.520 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 418 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின் படி கிட்டத்தட்ட 400% வீதமான கட்டில்கள் நிறைந்துள்ளன இந்த நெருக்கடியை பேரழிவு என குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் பரிசுக்குள் 110.8% வீதமும் இல் து பிரான்சுக்குள் 129.4% வீதமும் நிரப்பப்பட்டுள்ளன மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் பலத்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இல் து பிரான்சுக்குள் சராசரியாக தொற்று வீதம் (நேற்று திங்கட்கிழமை நிலவரம்) ஒவ்வொரு 100.000 பேருக்கும் 640 பேராக உள்ளது இந்த எண்ணிக்கை முந்தைய இரு தொற்று அலையின் போதும் கூட ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.