🇫🇷 🔴 சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய நபர்.! துப்பாக்கிச்சூட்டில் பலி.!!!!!

சிறையில் இருந்து வெளியேறிய மறுநாள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது இரவு 7 மணி அளவில் rue de Lorraine வீதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

26 வயதுடைய ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஆயுததாரி ஒருவன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான் மொத்தமாக எட்டு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் சம்பவ இடத்திலேயே அவர் சாவடைய ஆயுததாரி மகிழுந்து ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடினான்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் செந்தனியில் உள்ள Delafontaine மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது சாவடைந்த குறித்த நபர் இவ்வாரத்தின் ஆரம்பத்திலேயே சிறைச்சாலையில் இருந்து வெளியேறியிருந்தார் எனவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.