🇫🇷பிரான்ஸ் சிறையில் ஏற்பட்ட கலவரம்! காவற்துறையினர் விரைவு!

Seine-et-Marne இலுள்ள பிரான்சின் மிகப்பெரிய நிர்வாகச் சிறையான (centre de rétention administrative) Mesnil-Amelot சிறையில் இன்று பெரும் கலவரம் நடந்துள்ளது. இந்தச் சிறையானது முக்கியமாக, சட்டவிரோதமாகப் பிரான்சிற்குள் விமானம் மூலம் வந்தவர்களை, அவர்கள் நாட்டிற்குத் திருப்பினுப்பவதற்காக வைக்கப்பட்டிருக்கும் நிர்வாகச் சிறையாகும். விமான நிலையத்தின் அருகாமையிலேயே இது அமைந்துள்ளது. 60 இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள், அங்குள்ள கட்டடம் ஒன்றிற்குத் தீவைத்துள்ளனர்.

இந்தத் தீ, தீயணைப்புப் படையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலதிகக் காவற்துறையினர் அனுப்பப்பட்டு கலவரம் அடக்கப்பட்டுள்ளது. CRS பயைடணியொன்றின் அரைவாசி வீரர்களான 40 பேரும், மூன்று Seine-et-Marneபடைப்பிரிவினரும், பரிஸ் விமானநிலையத்தின் (Roissy) எல்லைப் பாதுகாப்புப் படையணியின் ( Police aux frontières) மூன்று பிரிவுகளும், சிறைச்சாலையின் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.