🔴 🇫🇷 பிரான்ஸ் சிறுவர்களின் துணிச்சலான செயலால் வியப்பில் உலக வாழ் மக்கள்….!!!! கரணம் ….????

தொடருந்து ஒன்றை கடத்த முற்பட்ட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு Bas-Rhin நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Saverne தொடருந்து நிலையம் ஒன்றில் தரித்து நின்ற தொடருந்து ஒன்றை நான்கு பதின்ம வயது சிறுவர்கள் கடத்த முயற்சித்துள்ளர் 16 தொடக்கம் 17 வயதுடைய அவர்கள் அங்கிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் Strasbourg நகரில் உள்ள அவர்களது வீட்டுக்குச் செல்வதற்காக இந்த தொடருந்தை கடத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் சிறுவர்கள் எவ்வளது முயற்சித்தும் தொடருந்து இயந்திரத்தை இயக்க முடியவில்லை ஆனால் இத்தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி தொடருந்தில் இருந்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நால்வரில் மூவர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர் இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.