⚫😳🇱🇰உலகயே திரும்பி பார்க்க வைத்த இலங்கை பெண்! அப்படி என்ன செய்தார்?

இலங்கையில் உருவாகியுள்ள மெனிகே மஹே ஹிதே (Manike Mage Hithe) என்ற சிங்கள பாடலின் மூலம் “யொகானி” உலகளவில் பிரபல்யமடைந்துள்ளார்.
1993 ஜூலை 30 கொழும்பில் பிறந்த இவர் பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், இசையமைப்பாளரும் ஆவர். கொழும்பில் பிறந்து வளர்ந்த யொஹானி.

யூடியூபராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பல பாடல்களைப் பாடிய இவர் இப்போது உலகம் முழுவதும் தன்னுடைய ஒரு பாடல் மூலம் பிரபலமாகி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இரவில் ஒன்றே ஒன்று (Manike Mage Hithe) இந்த பாடல் இப்போது நாடுகள் மொழிகள் கடந்து பலராலும் ரசிக்க படுகின்ற பாராட்ட படுகின்ற பாடலாக மாறியுள்ளது.
இந்த பாடலுக்கான வரிகளை துலன் எஆர் எக்ஸ் (துலஞ்சா அல்விஸ்) என்பவர் எழுதியுள்ளதோடு, சாமத் சங்கீத் இசை அமைத்துள்ளார். இந்த பாடலை யொஹானியுடன் சதீஸ்சான் பாடியுள்ளார். யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 3 மாதங்களில் 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்த பாடல் வெளியாகி பின்னர் அவரடைய யூடியூப் சேனலை 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இந்த பாடலை பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அசந்து வியந்து ரசித்து பாராட்டியுள்ளார்.
இலட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பாடல் தமிழிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமது மகிழ்ச்சியை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டதுடன், அவருடைய நடனக்காட்சி ஒன்றுக்கு இந்த பாடலை இணைத்து பதிவிட்டுள்ளார்.