⚫🇱🇰இலங்கை மக்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் விற்பனை செய்யப்படும் சில பொருட்கள் மீது விசேட விற்பனை வரியை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய சில உணவுப் பொருட்களுக்காக இந்த விற்பனை வரி விதிக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


இதற்கமைய நெத்திலி மற்றும் கருவாடு ஆகியவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபா விற்பனை வரியாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெண்ணெய் உள்ளிட்ட பால் உற்பத்திப் பொருட்களுக்கு கிலோ ஒன்றுக்கு 880 ரூபா விற்பனை வரியாக அறவிடப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் வெந்தயம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மாவு கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவும், கடுகு விதை கிலோ ஒன்றுக்கு 62 ரூபாவும் வரியாக அறவிடப்படவுள்ளது.

அத்துடன் உப்பு கிலோ ஒன்றுக்கு 40 ரூபா விற்பனை வரியாக அறவிடப்படும் எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த விற்பனை வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.