⚫🇱🇰உடனடியாக இலங்கையை முடக்குங்கள்! அவசர கடிதம்!

நாட்டை உடனடியாக முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அவசர கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறித்த கடிதத்தில் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியாத நிலைமை ஏற்படும்.


எனவே நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்கினால் நிலைமையை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று நம்புவதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இக்கடிதத்தில் நமது இடசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, ஜாதிக நிதாஸ் பெரமுனவின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய மக்கள் கட்சியன் தலைவர் திரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ஜி.வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் தலைவர் கெவிது குமாரங்க மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.