⚫🇱🇰இலங்கையில் 23 முதல் கட்டாயப் பொது முடக்கம்! எச்சரிக்கை விடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது “எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும்” என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா தொற்று மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம் பொதுமுடக்கம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்து வந்துள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடந்த சில வாரங்களாக நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்த நிலையில் பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.