பிரான்சில் 33வயதுடைய நபர் விபத்துக்குள்ளானார்., சோகமானநிலை.??

சிறிய மின்சார ஸ்கூட்டர் trottinette ஒன்றில் பயணித்த ஒருவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Bondy Seine-Saint-Denis நகரில் இடம்பெற்றுள்ளது.

இரவு 8.15 மணி அளவில் 33 வயதுடைய ஒருவர் l’avenue Gallieni வீதியில் குறித்த ஸ்கூட்டரில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார் அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த மகிழுந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது இதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

உலங்குவானூர்தி மூலம் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார் மகிழுந்து சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

ஆனால் சில நிமிடங்களில் அவரது Peugeot 207 மகிழுந்து Bondy மேம்பாலத்தில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டடது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.