விமான நிலையங்கள் திறப்பு…!! வெளிவந்த முக்கிய தகவல்!

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அதிகாரசபை பரிந்துரை செய்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படும் ஹோட்டல்கள், சுற்றுலா சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார பாதுகாப்பு குறித்து 24 மணித்தியாலமும் கண்காணிக்க சுற்றுலாத்துறை அதிகார சபையில் விசேட கண்காணிப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அதிகார சபையில் நேற்று இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.

மேலும் இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்கள்,சுற்றுலாத்துறை பிரதிநிதிகள்,சுற்றுலாபயணிகளுக்கான வழிகாட்டிகள் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.