இலங்கை வர முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையருக்கு மகிழ்சியான செய்தி …!!!!!

இலங்கையில் விமான நிலையங்கள் எதிர்வரும் 21.01.2021 திகதி முழுமையாக திறக்கப்படவுள்ளது அதற்கமைய அன்றைய தினம் முதல் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வர முடியும்.

எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு அல்லது அந்தந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் அனுமதியை பெற்று இலங்கை வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள “caaslpax@caa.lk ” என்ற மின்அஞ்சலை நாடுமாறு அழைப்பு விடுத்துள்ளது இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை.