🇱🇰 இலங்கை மக்களுக்கு மகிழ்சியான செய்தி…!!! சீரம் நிறுவனத்தால் 5 லட்சம் தடுப்பூசிகள்….!!

இந்தியாவின் சீரம் நிறுவனம் 5 இலட்சம் Oxford-AstraZeneca Covishield தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் 10 மில்லியன் தடுப்பூசிகளுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டிருந்தது இதற்கமைய குறித்த கொள்வனவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் வியாழக்கிழமை இரவு நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளின் மூலம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதேவேளை கொரோனா தடுப்பூசி விடயத்தில் உள்நாட்டு தேவைகளுக்கே முதலிடம் வழங்கப்படும் என இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.