⚫🇫🇷பிரான்ஸில் எரிகுண்டுடன் ஒருவர் கைது!

பெற்றோல் எரிகுண்டுடன் எலீசே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையான palais de L’Élysée வளாகத்துக்குள் குறித்த நபர் நுழைந்துள்ளார். எலிசேயின் பாதுகாவலர்கள் மற்றும் CRS காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு குறித்த நபரை கைது செய்தனர்.

கைது சம்பவத்துக்கு சற்று முன்னர், எலிசே மாளிகை அமைந்துள்ள rue du Faubourg-Saint-Honoré (8 ஆம் வட்டாரம்) வீதியில் மூவர் கொண்ட குழு ஒன்று நடந்து சென்றுள்ளது. பின்னர் மூவரும் எலிசே வாசலை நெருங்கியதும் திடீரென தங்களது மேலாடையை அகற்றி மறைத்து வைத்திருந்த பெற்றோல் எரிகுண்டை வீசி அதை சிறிய லைட்டர் மூலம் பற்றவைத்தனர்.

அதன் பின்னரே 33 வயதுடைய நபர் கதவு வழியாக எலிசே மாளிகைக்குள் நுழைய முற்பட்டுள்ளார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த 22 வயதுடைய பெண் ஒருவரும், 21 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். வேறு அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சிறிய அளவில் பரவிய தீ, உடனடியாக அணைக்கப்பட்டது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.