🔴 🇫🇷 சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய கட்டுப்பாடுகள் முழுமையான விபரத்தோடு ….!!!

சற்று முன்னர் சுகாதார அமைச்சர் Olivier Véran ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார் அதன்போது சில முக்கிய தகவல்களை வெளியிட்டார் அதன் முழு தொகுப்பையும் காணாலாம் Nièvre, Rhône மற்றும் Aube ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான முழுமையான தகவல்கள் இங்கே காணாலாம்.

24 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்
Orne,Eure-et-Loir,Loir-et-Cher,Indre-et Loire,Ardennes,Marne,Meuse,MeurtheetMoselle,Moselle ,Yonne,Doubs,Jura,Ain,Haute-Savoie,Savoie,Isère,Loire,Hautes-Alpes,Alpes-de-Haute-Provence,Var,Bouches- du-Rhône,Vaucluse,Gard.
மற்றும் Lozèreபாடசாலைகள் மூடப்படுவது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் முறையான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

தொற்று ஏற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தவும், வகுப்பறைகளை மூடவும் செய்து வருகின்றோம் 2,962 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டதுடன் 105 பாடசாலைகளும் இதுவரை மூடப்பட்டுள்ளன.

பிரான்சில் கொரோனா வைரஸ் சூழ்நிலை நன்றாக இல்லை எனவும் கடந்த 24 மணிநேரத்தில் 45.000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.