🇫🇷மக்களோடு மக்களாக களத்தில் சுகாதார அமைச்சர்..!!!

பிரான்ஸின் சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டார் Grenoble நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று திங்கட்கிழமை இங்கு புதிதாக கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது Grenoble பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உதவியுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

75 வயதுக்கு மேற்பட்ட பலநூறு பேருக்கு இன்று தடுப்பூசிகள் போடப்பட்டன நேரில் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் Olivier Véran தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 2.4 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என சுகாதார அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார் அந்த இலக்கு நோக்கி அரசு துரிதமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.