🔴🇱🇰உயிருக்கு ஆபத்து என்றால் வீட்டில் இருங்களேன்! சுமந்திரனுக்கு சரத்வீரசேகர அட்வைஸ்!

விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியே சுமந்திரன் தனது பாதுகாப்புக்கு விண்ணப்பித்தார். இதனை அடுத்து மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சுமார் 6 அதிரடிப்படையினர் அவரை சுற்றி நின்றார்கள். அது போக கோட்டபாய ஆட்சிக்கு வந்ததும் அதனை 9 பேராக உயர்த்தினார்.

தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 2 விடையம் நடந்துள்ளது. ஒன்று புலிகள் அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை என்று சிங்களமே ஒப்புக் கொண்டுள்ளது. மற்ற விடையம் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்று சுமந்திரன் போட்ட நாடகம், பின் பக்கத்தில் வெடித்துள்ளது. இன் நிலையில் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுமந்திரன் நேற்றைய தினம் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர், சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் என்றால் வீட்டில் இருக்கவேண்டும் அதைவிடுத்து அவர் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டியதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை சுமந்திரனின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில், அவரது பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதும் , அவர் இதே பதிலை தான் தெரிவித்துள்ளார்.