சுவிற்சர்லாந்தில் கொரோனாவால் சடுதியாக கூடிய இறப்பு வீதம் அதிகரிப்பு ! அச்சத்தில் மக்கள்..!

ஜனவரி 05.2020 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4020 தொற்றுகள் பதவியாகி உள்ளது 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 465 981 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 45 041 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது ஒரு நாள் சராசரி 3,217 ஆக உள்ளது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 208 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 19 205 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 98 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது அரச தகவலின் படி கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 7369 பேர் பலியாகி உள்ளார்கள்.

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை மொத்தம் 8,014 பேர் பலியாகியதாக தெரிவிக்கின்றது தனிமைப்படுதலை பொறுத்தவரை 5 ஜனவரி 2021, 20 951 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் 35 510 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தக் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 2277 அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமைப் படுத்தலில் உள்ளார்கள்.

புதிதாக 24 906 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது 24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 3 734 227 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.