சுவிஸ் வாழ் ஈழத்து பெண்ணிடம் பல லட்ஷம் ஏமாற்றிய யாழ். அரச ஊழியர்!

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான 37 வயதான குடும்பப் பெண் ஒருவரிடம், யாழ் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வட்சப் மூலமான தொடர்பினைப் பேணி 25 லட்சம் ரூபா அளவிலான பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். வலிகாமம் பகுதியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இளம் குடும்பஸ்தர் ஒருவர், இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த உத்தியோகஸ்தர் சுவிஸ் பெண்ணிடம் தன்னையும் விவாகரத்தானவர் என கூறியே அவருடன் தொடர்பைப் பேணியுள்ளார். அத்துடன் அறக்கொடை நிறுவனம் ஒன்றில் பிரதான பங்காளராகக் காட்டிக் கொள்ளும் குறித்த அலுவலர் தனது பேஸ்புக்கில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்று தொடர்பாக விபரங்களைப் பதிவிட்ட நிலையில் அது மற்றவர்களால் பகிரப்பட்ட போது அந்த பதிவை பார்த்த சுவிஸ் பெண் அந்த குடும்பத்தரை குறித்து முதலில் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னரே இருவரும் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் தெரியவருகின்றது. குறித்த அலுவலர் தானும் திருமணம் முடித்து விவாகரத்துச் செய்துவிட்டதாக சுவிஸ் பெண்ணுக்கு கூறியுள்ள நிலையில் பின்னர் உண்மை அம்பலமாகியுள்ளதாக அப்பெண் அந்த நபரின் விபரங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.