🔴🇨🇭சுவிஸில் கற்பதற்கு சிரமப்படும் மாணவர்கள்! தமிழ் மாணவர்களின் நிலை என்ன?

சுவிட்ஸர்லாந்தில் 57 வீதமான மாணவர்கள் கல்வி கற்பதற்கு சிரமப்படுவதாக அந்த நாட்டின் மத்திய கணக்கெடுப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பத்தில் ஒருவர் கற்றலில் இருந்து வெளியேற எண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது பாடத்திட்டத்தின் உள்ளடக்கங்களை புரிந்துக்கொள்வதில் 33 வீதமான மாணவர்கள் சிரமப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவ்வாறான தடைகள் உள்ளிட்ட மேலும் பலவற்றுக்கு ஆலோசனைகளை அல்லது ஊக்குவிப்புக்களை தேடுவோர் 24 வீதமானவர்கள் உள்ளனர்.

இதேவேளை 30 வயதுக்கு மேற்பட்ட 17 வீதமானவர்கள் நிதி ரீதியிலான சிக்கல்களையும் 17 வீதமானவர்கள் தனிப்பட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இயற்கை விஞ்ஞானம் அல்லது மருத்துவ துறையைச் சார்ந்த மாணவர்கள் 42 மற்றும் 39 வீதமான சவால்களுக்கு முகம்கொடுகின்றனர். குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்காக 26685 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.