⚫சுவிஸ் நபரிடம் காசு வாங்கிய யாழ் இளம் ஆசிரியை! பொலிஸ் நிலையம் வரை சென்ற விவகாரம்!

சுவிஸ்லாந்தில் வசிக்கும் 57 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஒருவரிடம் அவசர தேவை நிமிர்த்தம் பணம் வாங்கிய, யாழை சேர்ந்த 29 வயது இளம்ஆசிரியை, தற்போது அவரது தொல்லை தாங்க முடியாது பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த ரீச்சர் வட்சப் குறுாப் ஒன்றில் இணைந்திருந்ததாகவும் அந்த குறுாப்பில் இருந்த சுவிஸ் அங்கிள் போடும் பதிவுகளை ஆசிரியை வாசித்து அதற்கு அந்த குறுாபுக்குள்ளேயே கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் அவர் ஆசிரியையை தனி அழைப்பில் தொடர்பு கொண்டு நட்பாக இருந்ததாகவும் பொலிசாருக்கு ஆசிரியை கூறியுள்ளார். அத்துடன் இந்த நட்பின் வெளிப்பாடாக ஆசிரியைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்குவதற்கு குறித்த சுவிஸ் வாழ் நபர் பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது .

அதன் பின்னரே அவரது தகாத எண்ணம் வெளியாகத் தொடங்கியுள்ளதுடன் அவர் இலங்கைக்கு வரவும் ஆயத்தமாகியுள்ளார். இதனையடுத்து அவரின் தொடர்பை துண்டிக்க குறித்த ஆசிரியை முற்பட்டுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ளாமல் விட்டவுடன் இருவருக்கும் மோதல் உண்டாகி தற்போது பொலிஸ் நிலையம் வரை வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வட்சப் குறுாப்பில் இருந்தர்வர்கள் தற்பொழுது குறுாப்பை விட்டு ஓடத் தொடங்கியுள்ளார்களாம்.