⚫லண்டனில் அடித்து பட்டையை கிளப்பிய ஈழத்தமிழன்!

பிரித்தானியாவில் தமிழ் இளையோர்கள், பல துறைகளில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். ஆனால் கிக்-பாக்ஸிங் என்னும் துறையில், தமிழர்கள் இருப்பது அரிது தான். ஆனால் அந்த விளையாட்டும் எங்களுக்கு தூசி தான்… என்று நிரூபித்து, உலகத் தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளார், கெனிரூஜன் சுதாகரன் அவர்கள்.

23 வயதில் அவர் ஆபாரமாக கிக்-பாக்ஸிங் செய்கிறார். சமீபத்தில் லண்டன் கிருஸ்டல் பேலசில் நடந்த சுற்றில், பிரித்தானிய வீரரரை எதிர்கொண்டு. பெரும் வெற்றியடைந்துள்ளார். அதுவும் சில நிமிடங்களில். தமிழர்களின் மரபு வழி விளையாட்டாக, மல் யுத்தம், இருக்கிறது. காளை மாட்டை அடக்கும் ஜல்லிக் கட்டு என்று பல வீர விளையாட்டுகள் இருக்கிறது. அந்த வகையில் கிக்-பாக்ஸ்சிங்கில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள, கெனிரூஜனை, உலகத் தமிழர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதுவும் அவர் தமிழீழ தேசிய கொடியுடன் தான் சண்டைக்கு புறப்படுவது வழக்கம்…. ஈழத் தமிழன் என்றால் என்ன சும்மாவா ? முடிந்த வரை இந்த செய்தியை பேஸ் புக் ஊடாக ஷியார் செய்யவும். கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.