கொரோனா தடுப்பூசி தீயணைப்பு படையினருக்கு போட அரசு அனுமதி.!!!!!

தீயணைப்பு படையினர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அரசு அனுமதிதிக்க உள்ளது இன்று வெள்ளிக்கிழமை மார்ச் 12 ஆம் திகதி இரவு இந்த அனுமதியை அரசு வழங்க உள்ளது.

தீயணைப்பு படையினருக்கான கொரோனா தடுப்பூசிகள் நீண்ட நாட்களாக கோரப்பட்டு வந்த நிலையில் இன்று இறுதியாக அரசு அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்துள்ளது.

ஆனால் ஒற்றை தடுப்பூசி மாத்திரமே போடுவதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தடுப்பூசி குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அறிய முடிகிறது அதேவேளை அமெரிக்காவின் Johnson & Johnson நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் பிரான்சுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.