பரிஸ் நகரமுதல்வரின் கோரிக்கை என்ன??? அரசு செவி சாய்க்குமா????

வயது வரம்பை மீறி தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கோரிக்கை வைத்துள்ளார் தடுப்பூசி போடும் பணியை கட்டவிழ்த்து விடுங்கள் என ஆன் இதால்கோ கோரியுள்ளார்.

தற்போது பிரான்சில் கொரோனா தடுப்பூசிகள் மட்டுப்படுத்தப்பட்டு வயது வரம்புடனே போடப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பூசியினை கோரும் அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் எனவும் குறிப்பாக ஆசிரியர்கள் காவல்துறை மற்றும் மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த தடுப்பூசியினை போடவேண்டும் எனவும் ஆன் இதால்கோ கோரிக்கை வைத்துள்ளார்.

அதேவேளை இல் து பிரான்சுக்குள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டமான Seine-Saint-Denis இல் முதல்கட்டமாக இந்த அனைவருக்குமான தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எனவும் ஆன் இதால்கோ கோரிக்கை வைத்துள்ளார்.