🇫🇷 முக்கிய செய்தி.!!! பரிசில் குறைக்கப்படும் தடுப்பூசி மையங்கள் .!!

நவம்பர் மாதத்தில் இருந்து பரிசில் தடுப்பூசி மையங்கள் பாதியாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரிஸ் காவல்துறை தலைமையகம் மற்றும் இல் து பிரான்சின் பிராந்திய சுகாதார மையம் மற்றும் பரிஸ் நகரசபை ஆகியவை இணைந்து இத்தகவலை அறிவித்துள்ளன.

பரிசில் தற்போது 28 தடுப்பூசி மையங்கள் இயங்கி வருகின்றன இவை பாதியாக குறைக்கப்பட்டு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து 13 மையங்கள் மாத்திரமே செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரிசில் வசிக்கும் மக்களில் தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் 88% வீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதனாலேயே தடுப்பூசி மையங்கள் குறைக்கப்படுகின்றதாகவும் மீதமுள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.