பிரான்சில் “STADE DE FRANCE” மைதானத்தில் தடுப்பூசி மையம் திறக்க திட்டம்.!!!!

Stade de France மைதானத்தில் மிகப்பெரிய அளவுடைய தடுப்பூசி மையம் ஒன்று திறக்கும் திட்டத்தில் உள்ளதாக அறிய முடிகிறது இத்தகவலை Seine-Saint-Denis மாவட்ட நகராட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் போடப்படுவதை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அதற்குரிய வேலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாத முதல்வாரத்தில் இந்த நிலையம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 93 ஆம் மாவட்ட அரசும் அதே மாவட்ட தீயணைப்பு துறையும் இணைந்து செயலாற்றி வருகின்றன மைதானம் ஒன்றில் தடுப்பூசி மையம் திறக்கப்படுவது பிரான்சில் இது முதன்முறையல்ல முன்னதாக கடந்த திங்கட்கிழமையில் இருந்து மார்செ நகரில் உள்ள Vélodrome அரங்கில் தடுப்பூசி மையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.