🇫🇷 🔴 “நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை “சுகாதார அமைச்சர் அறிவிப்பு…!!! நாட்டு மக்கள் குழப்பத்தில் ????

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட கட்டாயப்படுத்த மாட்டோம் என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கும் போது நாங்கள் பிரெஞ்சு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தமாட்டோம் அதேவேளை பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அனைத்துவித விழிப்புணர்வையும் மேற்கொள்வோம் தடுப்பூசி தொடர்பான தெளிவற்ற தன்மைகளை அகற்றுவோம் என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.

அதேவேளை மருத்துவத்துறையில் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார் நேற்று ஜுலை 1 ஆம் திகதி வரையான நிலவரப்படி பிரான்சில் மொத்தமாக 34,103,180 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது மொத்த மக்கள் தொகையில் 50.6% வீதமாகும். அதேவேளை இரட்டை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 23,270,971 ஆக உள்ளது இது மொத்த மக்கள் தொகையில், 34.5% வீதமாகும்.