தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம்காட்டும் மக்கள்…!!!! நேற்று மட்டும் இவ்வளவு தொகை மக்களா…!!

நேற்று ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன நேற்றைய நாளில் 105.791 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி முதன் முதலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருந்த நிலையில் இதுவரை நாள் ஒன்றில் போடப்பட்ட அதிகளான தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும் இதுவரை 585,664 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களாவார் பெப்ரவரி மாத இறுதி வரை இந்த வயது வரம்புக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

பெப்ரவரி மாத இறுதிக்குள் 2.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.