🇫🇷💉பிரான்ஸ் கொரோனாத் தடுப்பூசிகள்! வெளியான முக்கிய விபரம்!

கொரோனாத் தடுப்பு ஊசிகளில் பிரான்ஸ் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே உள்ளது. கடந்த 27ம் திகதி டிசம்பர் மாதம், செவ்ரோனில் Mauricette உடன் தொடங்கியது பிரான்சின் கொரோனத் தடுப்பு ஊசியின் வரலாறு! ஆனால் தற்போது, அதாவது ஜனவரி 12ம் திகதியான நேற்றைய நிலவரப்படி பிரானசில் 189.314 பேரிற்குக் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவலானது இன்று 13ம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர், கொரோனாத் தடுப்பு ஊசியின் முதலாம் கட்ட ஊசியைப் போட்டுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவில் 5.92 மில்லியன் பேரிற்கும், சீனாவில் 4.5 மில்லியன் பேரிற்கும், இஸ்ரேலில் 1.69 மில்லியன் பேரிற்கும் கொரோனாத் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் தற்போது தான் இரண்டு இலட்சம் பேரிற்கான தடுப்பு ஊசிகளை நெருங்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.