⚫🇫🇷பிரான்ஸில் பணம் செலுத்தி கொரோனா பரிசோதனையா? இல்லை தடுப்பூசியா? வெளியான முக்கிய தகவல்!

கொரோனா வைரசுக்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் அனைத்திற்கும் கட்டணம் அறவிடப்படவேண்டும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் இது மிகவும் செலவீனமானது. PCR முடிவுகள் வைத்திருப்பவர்கள் நெடுந்தூரம் பயணிக்கவும், நிகழ்வுகள், நிகழ்ச்சிகளுக்கும் பயணிக்ககூடியதாக உள்ளது. இதற்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இது மிகவும் செலவீனமானது!” என மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை ஊக்குவிக்கவும், சுகாதார அனுமதி சிட்டையினை (pass sanitaire) தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை தாம் விரும்புவதாகவும் Valérie Pécresse தெரிவித்துள்ளார். ஒன்று மக்கள் தாமாக கொவிட் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்வதை விட இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!” எனவும் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.